ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

வேறு ஒருகளத்தில் கேட்கப்பட்ட வினா பேரளவான விடைகளை எதிர்நோக்கும் அந்த வினா: ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா? முதலாவது விடை: விடையாளர்: குமரிநாடன். சென்னை. பணத்தை பேரளவாக ஈட்டுவதற்கு பணத்தைக் கொண்டாடி இருக்க வேண்டும். அதற்குத் தேவையான அறிவையும், வலிமையையும் இன்னும் பல ஆயிரம் காரணிகளையும் கடவுள் ஒருங்கிணைத்துத் தரும். இதுவரை உங்களுக்குக் கிடைத்தவை அத்தனையும் நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே. ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம், நீங்கள் பேசும் தமிழின் அத்தனைச் சொற்களும் கடவுளில் பதிவாகிறது. அவற்றில் இருந்தே உங்களுக்கான கேட்பைக் கடவுள் புரிந்து கொள்கிறது. ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் இயல்பூக்கமாக தாங்கள் அடைந்த வெற்றிகளை மட்டுமே கொண்டாடி பேரளவு வெற்றிகளைக் குவிக்கின்றனர். அனைவருமே இவ்வாறான வெற்றிகளை குவிப்பது எப்படி என்பதை, ஐந்து அகவை வரையிலான குழந்தைகள் தமிழை முழுமையாகக் கற்றுத் தேர்வதில் இருந்து மந்திரம் என்கிற ஐந்தாவது முன்னேற்றக் கலையை நிறுவியுள்ளனர், தமிழ்முன்னோர். ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம்,...