புரிந்து கொண்டு முன்னேறுவதற்கான சீரான இயக்கத்திற்கான இயக்கமின்மையே கடவுள்.



வந்தவினா:

கடவுள் இல்லை என்பவன், என்றாவது ஒரு நாள், கடவுளின் கருணையை உணர்ந்து, கடவுளை நம்புவான்! ஆனால்… கடவுளுக்கு உருவச் சிலை வடித்து, அதையே வணங்குபவன், என்ன நேர்ந்தாலும், அவன் உருவாக்கிய, கற்சிலை முன்தானே  கதறுவான்?

தந்தவிடை:

1. கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே

2. பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற அயல்கள் அறியமாட்டாத, தமிழியல் கண்டு நிறுவிய, இயக்கமின்மையின் முயக்கப்பாடே கடவுள்.

3. புரிந்து கொண்டு முன்னேறுவதற்கான சீரான இயக்கத்திற்கான இயக்கமின்மையே கடவுள்.

4. கடவுள் வேறு. இறை வேறு. தெய்வம் வேறு. கடவுள், இறை, தெய்வம் என்பன தமிழ்ச்சொற்கள் மட்டுமே. அந்தச் சொற்களில் தமிழ்முன்னோர் பொதித்த பொருளில் உலகின் எந்த மொழியும் எந்தச் சொல்லையும் இன்றுவரை நிறுவியிருக்கவில்லை.

5. எடுத்துக்காட்டாக: காட், அல்மைட்டி, லார்ட் என்கிற எந்த ஆங்கிலச்சொல்லும் கடவுளையோ, இறையையோ, தெய்வத்தையோ குறிக்க மாட்டா. பிரம்மா, சிவா, விஷ்ணு, தேவ், பகவான் என்கிற எந்த சமஸ்கிருதச் சொல்லும் கடவுளையோ, இறையையோ, தெய்வத்தையோ குறிக்க மாட்டா. 

இந்த வினா பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற அயல்களில் பிழைப்பு நடத்தியிருக்கிற காரணம் பற்றியது. தமிழியலில் நிறைகிற யாருக்கும் இந்த வினாவிற்கான தேவை எழாது.

விரிவான புரிதலுக்கு இந்தக் கட்டுரைகளைப் படியுங்கள்!






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இணையவழியில் வருமானம்! எந்த அளவிற்கு உண்மை?

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது