தமிழகவெற்றிக்கழகம் விஜய்க்குத் தமிழ்நாடு முதல்வர் பதவி கிடைக்குமா?


வந்தவினா:

விஜய், ஒரு இளைய சினிமா கதாநாயகன், அழகிய நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதால், இளம் வயதினரை கவர்ந்தவர், இவரை நேரில் காண பெருங் கூட்டத்தை கூட்டுபவர், விஜய், வரும் தேர்தலில் தோல்வியுற்றால், சினிமாவுக்குப் போவாரா, மீண்டும் முதல்வர் கனவிலேயே காலத்தை கழிப்பாரா?

தந்தவிடை:

ராமசாமி (பெரியார்), கமல்ஹாசன், விஜய், மூவரும் கணியக்கலை அடிப்படையில் எண் ஏழுக்குச் சொந்தக்காரர்கள். ஆறு என்பது சொந்த அடிப்படைக்கான நிறைவு எண் ஆகும். ஆறு எண்ணினர் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்குவார்கள். ஆறின் அடிப்படையின் மீது எழுகிற எண்ணே ஏழு.

ஆகவே இந்த மூவரின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் சொந்த பாடாற்றல் மீது ஒரு தேடல் இருந்து கொண்டே இருப்பது இயல்பு.

அவர்களால் எண் எட்டுக்குச் சொந்தமான அதிகாரம், ஆட்சி என்கிற புகழ்தளத்திற்கு நகர்வது பெரும்பாடு ஆகும். பேரளவு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்கிற காரணம்பற்றி இவர்களுக்கு அரசியலில் முதல்வர் பதவி வரை வருவது அரிதான செயலே.

அண்ணாதுரையும் எண் ஏழுதான். முதல்வர் பதவியைத் தொட்ட அண்ணாவால் அதில் நீடிக்க முடியாமல்தானே போனது என்பது பொருத்திப் பார்க்கத் தக்கது. இது கணியக்கலை அடிப்படையிலான கணிப்பு.

மந்திரம் அடிப்படையில் அந்த மூவரும் உறுதியான வெற்றி காண-

1. முதல் உடைமையான சொந்தமொழியைக் கட்டாயம் கொண்டாடி இருக்க வேண்டும்.

நாம் நான்காவதாகப் பட்டியல்இட்ட அண்ணாதுரை, சொந்தமொழியான தமிழைக் கொண்டாடியதில் நிறைவை எட்டியவரே.

2. சீரான இயக்கத்திற்கான இயக்கமின்மையின் மூல முதல் ஆன கடவுளைக் கட்டாயம் புரிந்திருக்க வேண்டும்.

கடவுள் என்பது தமிழ்ச்சொல் மட்டுமே என்பதையும், அந்தச்சொல்லின் தமிழ்முன்னோர் பொதித்த பொருளைக் குறித்த புரிதலிலும், ராமசாமி(பெரியார்) சுழியமே.

கடவுள் குறித்த புரிதலுக்கு, கொஞ்சம் நெருக்கமாக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கியவர் அண்ணா என்கிற காரணம்பற்றி அவரை முதல்வர் பதவி தழுவியது.

ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் எண் எட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்கிற காரணம்: அரசியல் அவர்களைப் பச்சைக்கம்பளம் விரித்து வரவேற்றது.

ஸ்டாலின் எண் ஒன்றுக்குச் சொந்தக்காரர். எண்களின் மூலமுதலான ஒன்றால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஆனால் அது எட்டாக கட்டமைவதற்கு நெடும் பாடாற்றல் தேவை ஆகும். அந்த நெடும் பாடாற்றலில் அவர் முனைந்திருந்த காரணம் பற்றி அவருக்கு முதல்வர் பதவி சாத்தியம் ஆனது.

விஜய்க்கு, மந்திரம் அடிப்படையில் முதல்வர் பதவி சாத்தியம் ஆகவேண்டும் என்றால்- அவர், முதல்உடைமையான தமிழைப் பேரளவாகக் கொண்டாட முனைய வேண்டும்.

இயக்கமின்மையின் மூலமுதலான கடவுளைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். 

இயக்கமின்மையின் மூல முதலான கடவுளைப் புரிந்துகொண்டு, தமிழைப் பேரளவாகக் கொண்டாடி தமிழ்நாட்டு முதல்வர் பதவியை வெற்றெடுக்க விசை அவர்களை வாழ்த்துகிறோம்

விடையின் தெளிவான புரிதலுக்கான கட்டுரைகளைப் படிக்க உரிய இணைப்புகள்:

1. அறிவோம் கணியக்கலை: இன்று முன்னேற்றக்கலையாக கொண்டாடப்படும் நியுமராலஜி, அதிர்ஷ்ட விஞ்ஞானம் என்பனவற்றுக்கொல்லாம் மூலமானது தமிழ்முன்னோர் கண்டறிந்த கணியக்கலை. 

2. கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே.

3. முதலாவது உடைமை

4. இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை

5. 'மந்திரம்' நூல்அறிமுகம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இணையவழியில் வருமானம்! எந்த அளவிற்கு உண்மை?

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது