பிரம்மா மட்டுமே பிராமணர்களால் உருவாக்கப்பட்ட தேவன் ஆவான்.


வந்தவினா:

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது எது?

தந்தவிடை:

1. இன்றிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா- நாவலந்தேயம் என்கிற பெயரில் இருந்தபோது, நடு ஆசியாவில் இருந்து கிளம்பிய ஆடை நாகரிகம் அறிந்திராத ஆண்கள் கூட்டம் வட நாவலந்தேயம் வந்தடைந்தது.

2. அவர்களைப் பேரம்மணர்கள் என்று அழைத்த நாவலந்தேய வடபுல தமிழ்மன்னர்கள், அவர்களுக்கு ஊருக்கு வெளியே வாழ இருப்பிடம் ஒதுக்கினார்கள்.

3. அந்தப் பேரம்மணர்கள், அந்தப் பேரம்மணர் என்கிற தலைப்பை, தங்களின் எழுதாக்கிளவி மொழியான பாஷ்துவில், பிராமணர்கள் என்று மொழிமாற்றம் செய்து கொண்டார்கள். 

4. பாஷ்து மொழி பிராமணர் கிருதமாக பிராகிருதம் என்று புத்தாக்கம் பெற்றது. 

5. ஊருக்கு வெளியில் நிறுத்தப்பட்ட அவர்கள் ஊருக்குள் நுழைவதற்கு முன்னெடுக்கப்பட்ட முழக்கங்களின் தொகுப்பே ரிக் என்கிற முதல் வேதமாகக் கொண்டாடப் படுகிறது.

6. நான்மறை, ஐந்திரம் என்கிற தமிழியலின் இருமெய் கோட்பாட்டை புரிந்து கொள்ள முடியாமல், மறுத்தும் எதிர்த்தும் உருவாக்கப்பட்ட கொள்கைக் குறிப்புகளே யாசூர், சாமம், அதர்வணம் என்கிற அடுத்த மூன்று வேதங்கள் ஆகும். 

7. தமிழ்முன்னோர் நிறுவிய தமிழியலின் நான்மறை மாண்பாற்றல்கள் நிலம், நீர், தீ, காற்று என்பன. சமஸ்கிருத வேதத்தை மறை என்று தமிழாக்கம் செய்வது நூறுவிழுக்காடு பிழை.

8. இந்த நான்மறைகளின் இயக்கத்தால், இயக்கமின்மையாக இருக்கும் வெளி, விண்வெளி நிலை எய்தி, இயக்கம் தந்த நான்மறைகளை முயக்கும் விசும்பு ஆகிறது. நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளோடு ஐந்தாவது திரமாக விசும்பு உருவாகிறபோது ஐந்திரம் ஆகிறது. 

9. இரண்டாவதுமெய் என்கிற இந்த விசும்பை, நூறு விழுக்காடு மறுக்கிற பிராமணியம், தன்னுடைய கோட்பாட்டை அத்வைதம் என்று நிறுவுகிறது.

10. அத்வைதம் என்பதற்கு, துவைதம் அல்ல என்று பொருள். தமிழ்முன்னோரின் ஐந்திரத்தை அவர்கள் துவைதம் என்று புரிந்து கொண்டார்கள். ஐந்திரம் என்கிற இருமெய் கோட்பாட்டை மறுப்பதே அத்வைதம் ஆகும். 

11. இந்த வினாக்காரர் கேட்ட அத்வைதத்தின் மூலமான நான்கு வேதங்களின் மெய்ப்பொருள் பிரம்மா ஆகும். 

12. பிரம்மா என்பதற்கு பெரிய அம்மா என்பது பொருள். இயற்கையின் அனைத்தையும் கருவுற்ற அம்மா என்று பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஒற்றை மூலமே இந்த பிரம்மா.

13. பிரம்மா மட்டுமே பிராமணர்களால் உருவாக்கப்பட்ட தேவன் ஆவான்.

14. பிராமணர்கள்- வடநாவலதேய தமிழர்களுக்கு, பிரம்மாவால் படைக்கப்படாமல், பிரம்மாவின் காலில் இருந்து, அதாவது நேரடியாக மண்ணில் இருந்து (நான்மறை) தோன்றியதாக பிதற்றும் அதேவர்கள் என்று தலைப்பிட்டார்கள்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இணையவழியில் வருமானம்! எந்த அளவிற்கு உண்மை?

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது