தொடர் முன்னேற்றத்திற்கு நாம் ஆற்றியிருக்க வேண்டிய ஐந்து பாடாற்றல்கள்.
வந்தவினா:
நான் என் தொடர் முன்னேற்றத்திற்கு, நான் திளைத்திருக்க வேண்டியது உழைப்பிலா? அறிவிலா?
தந்தவிடை:
உழைப்பு அறிவு என்பனவெல்லாம் இடுகுறியான, அகன்ற அறிவுக்கான உலகினரின் ஓர்மைக்கோட்பாடு அடிப்படையிலான தலைப்புகள்.
இந்தத் தலைப்புகள், தாறுமாறு இயக்கத்திற்காக, மனிதர்கள் மீது இயங்குவது குறித்தவைகள்.
பின்வரும் ஐந்து பாடாற்றல்கள் காரணம்பொருந்திய ஆழ அறிவுக்கான, தமிழியல் என்கிற, இருமெய்க்கோட்பாடு அடிப்படையான, சீரான இயக்கத்திற்கு கடவுள் மீது இயங்குவது குறித்தது.
தொடர் முன்னேற்றத்திற்கு நாம் ஆற்றியிருக்க வேண்டிய பாடாற்றல்கள்.
1. கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே என்று அறிந்து கொள்வது, கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில் கடவுளைத் தெளிவாகப் புரிந்து கொள்வது.
2. நம் தேவைகள் ஒவ்வொன்றையும் கடவுளிடம் கேட்பது
3. கேட்ட தேவையைக் கடவுள் நிறைவேற்றித்தரும் வரை காத்திருப்பது
4. கடவுள் நம் கேட்பை நிறைவேற்றித்தரும் வரை கமுக்கம் பேணுவது.
5. கடவுள் நிறைவேற்றித்தந்த ஒவ்வொரு தேவைக்கும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்திற்கு கடவுளைப் பாராட்டிக் கொண்டாடுவது
இந்தப் பாடாற்றிலில் ஒவ்வொரு ஐந்து அகவை வரையிலான குழந்தையும், அனைத்து வெற்றியாளர்களும் இயல்பூக்கமாகத் திளைத்திருக்கிறார்கள்.
நீங்கள் தெளிவாகக் கற்றுக்கொண்டு, இந்த ஐம்பெரும் பாடாற்றலில் திளைக்க, தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் உங்களுக்கு உதவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக