ஆண்களுக்கு, எந்த அகவையில் பெண்களின் மையல் (மோகம்) அறவே இல்லாமல் போகும்?

 வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினா:


பேரளவான விடைகளை எதிர்நோக்கும் வினா:

ஆண்களுக்கு, எந்த அகவையில் பெண்களின் மையல் (மோகம்) அறவே இல்லாமல் போகும்?

விடையாளர்: குமரிநாடன். சென்னை.

முதலாவது விடை: 

வினா குறிக்கிற அந்த மையல், அறவே இல்லாமல் போவதற்குத் திருமணமே எல்லையாக முடியும். அகவை அல்ல!

தமிழ் முன்னோர் திருமணம் என்கிற உயர்ந்த கட்டமைப்பை உருவாக்கியதும்,  அது உலகிற்கே கொடையானதும் இந்த நோக்கம் பற்றியதே.

திருமணமான பிறகு மனைவியை உயிராக காதலிக்கிற எந்த ஆணுக்கும் இன்னொரு பெண் ஒரு பொருட்டாகவே மாட்டாள்.

பாவேந்தர் பாரதிதாசன் குடும்பவிளக்கில், முதுமைக் காதல் குறித்து எழுதியுள்ளதைப் பாருங்கள்.


ஒருவனும் ஒருத்தியும் அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையைக் காதல் வாழ்க்கை என்கிறோம். இந்தக் காதல் வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதைப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.

முதியவளின் உடலில் பளபளப்போ அழகோ இல்லை. என்றாலும் முதியவர், அவள்மேல் கொண்டிருந்த காதல் மாறவில்லை. இதற்கு அடிப்படை அவர் அவரின் மனைவி மீது உயிராகக் கொண்ட காதலே ஆகும்.

புதுமலர் அல்ல காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு!

சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு

வறள்நிலம்! குழிகள் கண்கள்!

எது எனக்கின்பம் நல்கும்?

'இருக்கின்றாள்' என்ப தொன்றே!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இணையவழியில் வருமானம்! எந்த அளவிற்கு உண்மை?

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது