தமிழ் மொழியின் சிறப்புகள் என்னென்ன?


பேரளவான விடைகளை எதிர்நோக்கும் என் வினா:

தமிழ் மொழியின் சிறப்புகள் என்னென்ன?

நான்: வெண்ணிலா, ஈரோடு.

கருத்துகள்

  1. நான் தமிழ்ப்பற்றுமிக்குள்ளவன். கலப்படம் இல்லாத்தூ தமிழில் 12 நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். தற்போது திருக்குறள் எளிய உர 934 பக்கங்களில் பெரிய நூலாக ஆகி வருகின்றது பாவாணர் மமலும், அவரின் குமரிக்கண்டக் ... கோட்பாட்டின் மீதும் பற்றுக்கொண்டு பாவாணர் மன்றம் நடத்தி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மொழியின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம் ....
    ஏடும் போதாது : காலமும் போதாது!
    அரிய, அருமையான , எழிலார்ந்த , இனிய , , எளிய , பொருள செறிந்த , உலகின் முதலில் இயற்கையாகத் தோன்றிய , உலகின் முதல் மொழி ! தமிழிலிருந்து தோன்றிய மொழிகளே , உலகில் இன்று பேசபட்டு வரும் மொழிகளும் , சமற்கிருதம் போல் மக்களால் பேசப்படாத மொழிகளும்!
    இலங்கையின் வரலாற்று நூலான" மகாவம்சம"
    நூலில், "பாண்டிய வேந்தர்கள ஏழு தமிழச்
    சங்கங்களை அமைத்துத் தமிழ் மொழியைப் பாதுகாத்து
    வளர்த்தனர். எனக்
    குறிப்பிடப்பட்டுள்ளது !
    தமிழில் உள்ள எழுத்துகள் :- உயிர் - 12 , மெய் - 18இவை இரண்டும் சேர்ந்து 30 எழுத்துகள்.
    உயிரும் மெய்யும் ஆகிய எழுத்துகள் இணைத்து -
    12 x 18 = 216 உயிர் மெய் எழுத்துகள்!
    உயிர்மெய் எழுத்துகளும் சேர்ந்த , 12+18 +216. = 246
    எழுத்துகள் நெடுங்கணக்கு""




    பதிலளிநீக்கு
  3. நெடுங்கணக்கு முறை எழுத்துகளைக் கொண்ட , உலகின் ஒரே மொழி - நம் தாய்மொழி தமிழ மட்டுமே!.

    தமிழில் இயல்பான நடையாகப் பாட்டு நடையே முன்பு இருந்தது பின்னர் பேச்சு நடை எழுத்துநடை பாட்டு நடை - என , முக்கூறாக ஆனித தொடர்கிறது.
    பாட்டு நடை மிகவும் இனியதும். அரியதும் ஆகும்.
    யாப்பு - இலக்கணம் எனப் பாட்டு இலக்கணம் உள்ளது.
    ஒவ்வொருவகைப்பாடலுக்கும் , ஒவ்வொரு வகை வரையறை உண்டு !. வெண்பா - என்பது மிகவும் சிறந்த அரிய பாடல் முறை ஆகும்.
    பாட்டுகளில் ,ஓர் அடியில்
    உள்ள தனித்தனிச் சொற்பகுதியைச் சீர் - என்பர்!
    இந்தச் சீர்கள் ஒவ்வொன்றும் , அடுத்து வரும் சீரோடு தனைத்து இணைக்கப்படல் வேண்டும். பாடல் வகை ஒவ்வொன்றுக்கும் ,அதற்குரிய தளைகள்
    மட்டுமே அமைதல் வேண்டும்!
    வெண்பா - வகைப்பாட்டுக்கு ,
    மா- நிரை ; விளம் - நேர் ,
    ஆகிய இரண்டு வகை இயற்சீர் வெண்களைகளும்;
    காய் - நேர் என்னும் வெண்சீர் வெண்தளையும்
    அமைதல் வேண்டும்
    இவ்வாறு, அகவல், கலி, வஞ்சி, ஆசிரிய மண்டில
    வகைகள், ..... என விரிவாக உள்ளது , தமிழின் இயற்றமிழ்ப்பாட்டு வகைகள்!
    இசைத்தமிழ்ப் பாடல் வகை என்றும் உண்டு!
    இசை இன்பத்தில் ஆழ்ந்து தோய்ந்து துய்த்து மகிழும் நோக்கத்தில் செய்யப்படுவதே இசைத் தமிழ்ப் பாடல்கள்!
    உடலில் வெளிப்படையாகப்
    பிறர்கண்டு அறியும்
    வகையில், நம்மனத்தின் உணாச்சிகளை வெளிப்படுத்தி நடனம் ஆடுவதற்கு என்றே தனி வகைப்பாடல்கள் உள்ளன! !. அவை நாட்டியத் தமிழ்ப் பாடல்கள் ஆகும். நாட்டியத் தமிழே - நாடகத் தமிழ் என்று சட்டப் பெறுகிறது!
    இயற்றமிழ் - இசைத்தமிழ் -
    நாட்டியத் தமிழ் -
    எனத் , தமிழ் மொழி
    மூன்று தமிழ்கள்

    பதிலளிநீக்கு
  4. இதனை முத்தமிழ்கள்- எனக் குறிப்பிடுவர் , தமிழ் மொழியியற் சான்றோர்!
    முத்தமிழிலும் வல்லவர்களாக
    விளங்கியோர் , தற்காலத்தில் எவரும் இலர் :
    இயற்றமிழின் உரைநடை
    யிலேயே , பிழைகளும் , அயன்மொழிச் சொற்களையும் - கிரந்த
    எழுத்துகளையும் கலந்து எழுதி வந்த கருணாநிதி
    போன்றோர் , இயற்றமிழிலேயே
    அறிவர் அல்லர்!
    அத்தகையோரை -...
    முத்தமிழ் அறிஞர் எனப்
    போற்றுதல் _ _ _ கருங்காக்கையை வெண்
    கொக்கு எனக் கூறும்
    முழுமூடச் செயலாகும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினாவுக்குவிடைகள்! இணையத்தளம் வரவேற்கிறது

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?