ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

வேறு ஒருகளத்தில் கேட்கப்பட்ட வினா


பேரளவான விடைகளை எதிர்நோக்கும் அந்த வினா: 
ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

முதலாவது விடை:

விடையாளர்: குமரிநாடன். சென்னை.

பணத்தை பேரளவாக ஈட்டுவதற்கு பணத்தைக் கொண்டாடி இருக்க வேண்டும். 

அதற்குத் தேவையான அறிவையும், வலிமையையும் இன்னும் பல ஆயிரம் காரணிகளையும் கடவுள் ஒருங்கிணைத்துத் தரும்.
இதுவரை உங்களுக்குக் கிடைத்தவை அத்தனையும் நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே.

ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம், நீங்கள் பேசும் தமிழின் அத்தனைச் சொற்களும் கடவுளில் பதிவாகிறது. அவற்றில் இருந்தே உங்களுக்கான கேட்பைக் கடவுள் புரிந்து கொள்கிறது.

ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் இயல்பூக்கமாக தாங்கள் அடைந்த வெற்றிகளை மட்டுமே கொண்டாடி பேரளவு வெற்றிகளைக் குவிக்கின்றனர்.

அனைவருமே இவ்வாறான வெற்றிகளை குவிப்பது எப்படி என்பதை, ஐந்து அகவை வரையிலான குழந்தைகள் தமிழை முழுமையாகக் கற்றுத் தேர்வதில் இருந்து மந்திரம் என்கிற ஐந்தாவது முன்னேற்றக் கலையை நிறுவியுள்ளனர், தமிழ்முன்னோர்.

ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம், நீங்கள் பேசும் தமிழின் அத்தனைச் சொற்களும் கடவுளில் பதிவாகிறது. அவற்றில் இருந்தே உங்களுக்கான கேட்பைக் கடவுள் புரிந்து கொள்கிறது அல்லவா? நீங்களே கடவுளிடம் நேரடியாகவும் கேட்டுப்பெற முடியும் என்பதைத் தெளிவுபடுத்தும் கலையே தமிழ்முன்னோர் நிறுவியுள்ள ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம்.

மந்திரத்தைக் கற்று அனைவரும் அவர்கள் தேவைகளைப் பேரளவாகக் குவித்துக் கொள்ள முடியும். 

நீங்களும் மந்திரத்தைக் கற்று பேரளவாக முன்னேறும் நோக்கத்திற்கு, எனக்கு, உங்களுக்கு ஐந்தாவது முன்னேற்றக்கலையை அறிமுகப் படுத்தும் வாய்ப்பை வழங்கிய இந்த வினக்காரருக்கு நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன்.


கருத்துகள்

  1. பணம் ஈ ட்டுவதற்கு அறிவே அடிப்படை:
    உடல் வலிமை இருந்தாலும் , அதை முறைப்படிப் பயன்படுத்துதற்கு , அறிவே முக்கியம்!. அறிவு என்பது ; படிப்பறிவும் பட்டறிவும் இணைந்த பேரறிவாகத் திகழ்ந்தால்; செய்து முடிக்க இயலாத பணிகளே இல்லாமல் ஆகிவிடும்.
    ""அறிவு அற்றங் காக்கும் கருவி. செறுவர்க்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. . பணம் ஈட்டுவது , மிகவும் அறத்தின் வழியில் அமைய வேண்டும்.
      ""அழக்கொண்ட பொருள் அழப்போம்
      இழப்பினும்
      பிற்பயக்கும் நற்பா லவை ""
      இது திருக்குறள் கூறும் பாடம்!
      எவரையும் துன்புறுத்தி ஈட்டும் செல்வம் , அவ்வாறு ஈட்டுபவரை த்துன்புறுத்திவிட்டுச் சென்று விடும்! நல்ல முறையில் ஈட்டிய செல்வம் இழக்க

      நீக்கு
  2. நல்ல முறையில் ஈட்டிய செல்வத்தை ஒருவர் இழக்க நேர்ந்தாலும் அச்செல்வம் மீண்டும் அவருக்கு வேறு வகையில் பயன் தரும்.
    அதனால் கல்வி அறிவும் ,பட்டறிவும் மிகப்பெற்று எவரையும் வருத்தி டாதவாறு ஈட்டும் செல்வமே நமக்கு நன்மைகளைத் தரும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினாவுக்குவிடைகள்! இணையத்தளம் வரவேற்கிறது